வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:25 (07/12/2017)

ஜனாதிபதி விருது பெற்ற மதுரை கலெக்டரின் அடுத்த சபதம்!

கலெக்டர்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக, மதுரை மாவட்ட ஆட்சியருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். "மாற்றுத்திறானாளிகள் துறைமூலம் பல திட்டங்களை மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது. சுய உதவிக் குழுக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் என்று பலரும் உதவி செய்துவருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாக 14.36 கோடியும், மேலும் 25 துறைகளின் மூலமாக 35.77 கோடி ரூபாயில் சில திட்டங்கள் செயல்படுத்தபட்டுள்ளது. இந்த விருதின்மூலமாக, மதுரை மாவட்ட நிர்வாகம் மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கம் கிடைத்துள்ளது.

அடுத்த மூன்று மாதத்துக்குள், பிச்சைகாரர்கள் இல்லாத மாவட்டமாக மதுரை மாவட்டத்தை மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். மூத்த குடிமக்களுக்கான பென்ஷன் தொகை தடையின்றி வழங்கப்படும்.  மதுரை மாவட்டத்துக்கு, ஒரு வருடத்தில் மட்டும் மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. முதலாவதாக தேர்தல் வாக்காளர் ஊக்குவிப்பிற்கும், மீனாட்சி அம்மன் கோயில் சிறந்த சுற்றுலாத் தளமாக ஆக்கியதற்கும், தற்போது மாற்றுத்திறானாளிக்கு என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் தொடர் பணியால்  டெங்கு காய்ச்சல் 70 சதவிகிதம்  குறைந்துள்ளது. வீடு வீடாகச் சென்று அனைத்துப் பகுதிகளையும்   ஆய்வுசெய்துவருகிறோம். தொடர்ந்து விழிப்பு உணர்வு வழங்குகிறோம். காய்ச்சல் பற்றிய சர்வே நடைபெற்றுவருகிறது.டெங்குவை ஒழிக்க, நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் .