வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (07/12/2017)

கடைசி தொடர்பு:15:04 (07/12/2017)

`சுமதி, தீபனை காணவில்லை' - ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலரிடம் விஷால் முறையீடு

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

விஷால்
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷாலும் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தார். மனு மீதான பரிசீலனையின்போது, வேட்புமனுவை நிராகரிப்பதாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். வேட்புமனுத்தாக்கல் செய்பவரை அந்தத் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன் மொழிய வேண்டும் என்பது விதி. விஷாலை முன்மொழிந்து முதல் கையெழுத்துப்போட்ட சுமதி மற்றும் ஒன்பதாவது கையெழுத்துப் போட்ட தீபன் ஆகியோர் கையெழுத்துப் போடவேயில்லை என்று பின்வாங்கிவிட்டனர். இதனால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சுமதி மற்றும் தீபன் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாக விஷால் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். ஆனாலும், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரபூர்வமாகத் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார். 

இந்நிலையில் இன்று காலை தேர்தல் அதிகாரி மலாய் மாலிக், விஷாலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், சுமதி மற்றும் தீபன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால் உங்களது வேட்புமனு மறுபரிசீலனைச் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இன்று 3 மணிக்குள் அவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ட்வீட் செய்திருந்த விஷால், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என் வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டுவிட்டு, பின்னர் எங்கள் கையெழுத்தில்லை என்று பின்வாங்கிய அந்த இருவரையும் இன்று 3 மணிக்குள் ஆஜர்படுத்த தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இரண்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரமே உள்ளது. அவ்வாறு அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தால் என் வேட்புமனுவை ஏற்றுக்கொள்ள மறுபரிசீலனை செய்வார்களாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். சுமதி மற்றும் தீபனை காணவில்லை என்றும் விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் விஷால், தேர்தல் அலுவலர் வேலுச்சாமியைச் சந்தித்துப் பேசிவருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க