தற்காப்புக் கலை பயிற்சி! - கின்னஸ் சாதனைக்காக அசத்தும் மதுரை மாணவிகள்

டேக்வாண்டோ

மதுரை லேடிடோக் கல்லூரியில், கின்னஸ் சாதனைக்கான முயற்சியாக டேக்வாண்டோ (Teakwondo) என்ற தற்காப்புக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. Safe places for all என்ற தலைப்பின் கீழ் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை  16 நாள்கள் நடைபெறும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தற்காப்புக் கலையின் அவசியத்தை உணர்த்தும் விதமாக, இதை மேற்கொண்டதாகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

கொரியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட இந்த தற்காப்புக் கலையை,  மதுரை  லேடிடோக் கல்லூரியின்  முதலாமாண்டு மாணவிகள் 1000 பேர் தொடர்ச்சியாக 30 நிமிடங்கள்   நிகழ்த்திக் காட்டினர். ஏற்கெனவே, 800 மாணவர்கள் மற்றும் 200 மாணவிகள் என 1000 பேர்  நிகழ்த்திய முந்தைய கின்னஸ் சாதனையை  இந்த சாதனை முறியடிக்கும் விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!