வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (07/12/2017)

கடைசி தொடர்பு:18:27 (07/12/2017)

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி விபத்தில் படுகாயம்!

தினகரன் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி திண்டுக்கல் அருகே ஒரு விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார்.

புகழேந்தி

சசிகலா அணியின் போர்க்குரலாக மீடியாக்களில் வெளிப்படுகிறவர் புகழேந்தி. கர்நாடக மாநில அம்மா அணிச் செயலாளராக இருந்தவர். தமிழகத்தின் மிகப்பெரிய ஐ.டி ரெய்டுக்குப் பின்னர் எடப்பாடி அணிப்பக்கம் மாறுவார் என வதந்திகள் பரவியபோதும், தொடர்ந்து தினகரன் ஆதரவாளராகவே தொடர்ந்து வருகிறார்.

விபத்து

இன்று, புகழேந்தி நண்பர் ஒருவரின் மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காகப் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில், தடுப்புச்சுவரின் மீது மோதி புகழேந்தி வந்த கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கிய புகழேந்தி படுகாயமடைந்தார். இரண்டு கைகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. படுகாயமடைந்த புகழேந்தி தற்போது திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.