கபாலீஸ்வரருக்குத் தங்க நாகாபரணம் சமர்ப்பிப்பு!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்கு இன்று தங்க நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது. 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர்


தருமமிகு சென்னையின் பழைமையான பகுதி மயிலாப்பூர். மயிலுருவாகி ஈசனை வணங்கி அன்னை பராசக்தி வழிபட்ட இடம் இது. ஈசன் எடுத்தோதிய வேதத்தின் சாரத்தை கவனிக்காமல், ஆடிக்கொண்டிருந்த மயிலின் அழகில் மனம் பறிகொடுத்தாள் அன்னை சக்தி. இதனால் கோபமான ஈசன், எதன் மீது மையல் கொண்டாயோ, அதுவாகவே மாறக்கடவது என்று சாபமிட்டார். சாபத்தின்படி புன்னைவனக்காடான மயிலைக்கு வந்து ஈசனை வழிபட்டு மணந்தார் என்கிறது தலவரலாறு.

கபாலீஸ்வரர்

இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்த வரலாற்றுச் சிறப்புக்கு மாபெரும் அடையாளமாக இருப்பது கபாலீஸ்வரர் திருக்கோயில். மயிலையில் மத்தியில் பரந்த குளத்தின் அருகேயே அமைந்துள்ளது திருக்கோயில். கபாலீஸ்வரர், கற்பகாம்பிகை என்ற பெயர்களில் ஈசனும், அம்மையும் இங்கு வீற்றிருக்கிறார்கள். பங்குனி உத்திர திருவிழாவைச் சிறப்பாகக் கொண்ட இந்தக் கோயிலின் நாயகர் கபாலீஸ்வரரின் அழகுக்கு அழகு சேர்க்க இன்று தங்க நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது. சிவலிங்கத்தின் மீது சாத்தவென்று இன்று தங்கத்தால் ஆன நாகாபரணம் காஞ்சி மகான்கள் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதிகள், விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் அவர்கள் பூஜித்து இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!