வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (07/12/2017)

கடைசி தொடர்பு:20:10 (07/12/2017)

மிஷ்கின், சுசீந்திரன் கைகோக்கும் `சுட்டுப்பிடிக்க உத்தரவு’

'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா எடுக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்துக்கு ' சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்று பெயரிடப்பட்டுள்ளது. வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இந்தப் படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். 

மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் 2 பேர் முதல்முறையாக இணைந்து நடிப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் பெயரை வைத்து படம் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பது தெரிகிறது. கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம்மோகன் படத்தைத் தயாரிக்கிறார். 'துப்பறிவாளன்' படத்துக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், அவர் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க