வெளியிடப்பட்ட நேரம்: 00:23 (08/12/2017)

கடைசி தொடர்பு:08:00 (08/12/2017)

குழித்துறை போராட்டம் வாபஸ்... ரயில் சேவை மீண்டும் தொடங்கியது!

ஒகி புயலால் கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டுத் தரக் கோரி கன்னியாகுமரி, குழித்துறை ரயில்நிலையத்தில் நேற்று காலை முதல் நடைபெற்றுவந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி, ஏழு நாள்களாக அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழக அரசின் தரப்பில் உரிய மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், நேற்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் குழித்துறை ரயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகள் அங்கு சென்று மீனவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், `முதல்வர் மீனவர்களை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்' என்று ஆட்சியர் தரப்பில் கூறப்படவே, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குழித்துறை ரயில் நிலையம்

இதனால், கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக குழித்துறை ரயில்நிலையத்தில் நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. அங்கிருந்த மக்களை போலீஸார் கலைந்து போக வைத்தனர். இதனால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்நிலையத்துக்கு வந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க