குடும்பத் தலைவரின் பெயரே மாற்றம்: தொடரும் ஸ்மார்ட் கார்டு பரிதாபங்கள்...!

நீலகிரி மாவட்டத்தில், ஸ்மார்ட் கார்ட்டில் குடும்பத் தலைவரின் பெயரே மாறியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது.

ஸ்மார்ட் கார்டு

விநாயகர் படம், காஜல் அகர்வால் படம் என தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு குளறுபடிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், தவறுகளில் இருந்து அரசு திருந்தியதாகத் தெரியவில்லை. படுக தேச கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் மஞ்சை மோகன். நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த இவருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவர் பெயரில் இவருக்குப் பதிலாக, இவரது மகள் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மஞ்சை மோகன் கூறுகையில், "ஸ்மார்ட் கார்டில், குடும்பத் தலைவர் இடத்தில் எனக்குப் பதிலாக, என் இரண்டாவது மகள் சுகன்யாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. எனது பெயரை விஸ்வநாதன் மோகன் என மாற்றிப் போட்டிருக்கிறார்கள். எனது முதல் மகளின் பெயரே ஸ்மார்ட் கார்டில் இல்லை. மேலும், நான் டேவிஸ்டேல் கடையில் ரேஷன் பொருள்கள் வாங்குகின்றேன். ஆனால், விலாசத்தில் மஞ்சை கம்பம் என்று அச்சிடப்பட்டுள்ளது. இப்படி ஒரே கார்டில் நான்கு தவறுகள் உள்ளன. கொஞ்சம்கூட கவனம் இல்லாமல், தொடர்ந்து இதுபோன்ற தவறுகளை செய்துவருகின்றனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!