தமிழகத்தில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும்! - சரத்குமார்

சரத்குமார்

‘‘உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகத் தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும்’’ எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,28,234 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது, 2016–ம் ஆண்டு மே மாத எண்ணிக்கையான 2,54,497 வாக்காளர்களில் இருந்து 26,263 குறைவாகவும், 2017–ம் ஆண்டு ஏப்ரல் மாத எண்ணிக்கையான 2,62,721 வாக்காளர்களில் இருந்து 34,487 குறைவாகவும் இருக்கிறது. 8 மாத இடைவெளியில் சுமார் 13 சதவிகித வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது வியப்பாக உள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகத் தமிழகம் முழுவதும் இதுபோன்ற போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும். முறைகேடாக வாக்காளர்களைச் சேர்க்கும் அதிகாரிகளுக்கும், சேர நினைக்கும் வாக்காளர்களுக்கும் கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். பல்வேறு தேர்தல் முறைகேடுகளோடு சேர்த்து, போலி வாக்காளர்கள் என்பதும் களையப்பட்டு, ஜனநாயகம் களங்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்’’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!