ஜனவரி 1 முதல் பழைய ரேஷன் கார்டுக்கு உணவுப்பொருள் இல்லை... - அரசு அறிவிப்பு!

ரேஷன் கடை

னவரி முதல் தேதியிலிருந்து ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கக்கூடாது என பொது விநியோகத் துறை அறிவித்துள்ளது. 

ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கத் தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுவருகிறது. இதில் தமிழகத்தில் 60 சதவிகிதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜனவரி முதல் தேதியிலிருந்து ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கே ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்க வேண்டும். பழைய ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்குப் பொருள்கள் வழங்கக்கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கும் அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஆகவே, ஸ்மார்ட் கார்டு இல்லாதவர்கள் இந்த மாதத்துக்குள் அதைப் பெற்றுக்கொண்டு பொருள்களை வாங்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளது. பிழையாக வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!