ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: அதிர்ச்சியைக் கிளப்பியுள்ள மருத்துவர் பாலாஜியின் விளக்கம்!

ஜெயலலிதா மரணம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். ஏற்கெனவே தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் ஜெயலலிதா வைத்த கைரேகை பற்றி வாக்குமூலம் அளித்திருந்தார். அந்த கைரேகைக்கு சான்றொப்பம் இட்டார் டாக்டர் பாலாஜி.

பரபரப்பாக நடக்கும்

இந்த நிலையில், விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார். உயர் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்ததாக தெரிவித்தவர், விசாரணை கமிஷன் முன்னிலையில் அவரை நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார்,  'அவருக்கு, நான் சிகிச்சை அளிக்கவில்லை, ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர்களும், எய்ம்ஸ் மருத்துவர்களும்தான் சிகிச்சை அளித்தனர்' என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் என்ன நிலையில் இருந்தார் என்பதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாக்டர் பாலாஜி அளித்துள்ள விளக்கம் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, `ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் சங்கர் வருகின்ற 12-ம் தேதியும், தீபக்.14-ம் தேதியும், மாதவன் 15-ம் தேதியும், டாக்டர் மகேந்திரன் 19-ம் தேதியிலும் ஆஜராக உள்ளனர். தமிழக அரசின் முன்னாள் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் வருகிற 20-ம் தேதியும், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் 21-ம் தேதியும் ஆஜராகவும் சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை ஆணையம். மிக விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தின் நடவடிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!