அ.தி.மு.க. - தி.மு.க.வினர் கலந்துகொண்ட திருமணம்... களைகட்டிய காரைக்குடி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கல்லல் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியனின் மகள் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு அ.தி.மு.க. அமைச்சர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தி.க தலைவர் வீரமணி, குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், ஆர்.கே நகர் இடைத்தேர்தலால் திருமணத்துக்கு வராமல் பன்னீர்செல்வம் அவரது மனைவியை மட்டும் அனுப்பிவைத்தார். காரைக்குடியின் முக்கியமான பகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. கொடிகள் பக்கத்து பக்கத்தில் கூட்டணியாக பறந்தது.

மேலும், திருமணத்தை முடித்துவைத்து வாழ்த்துரை வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.க தலைவர் வீரமணி. `தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகத்திற்கு உரியதாக அமைந்துள்ளது. தற்போதைய தேர்தல் சுதந்திரமான, நியாயமான முறையில் தேர்தலாக நடக்குமா என்பது பொதுமக்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் அரசியல் நுழையக் கூடாது. குறிப்பாக உத்தரப் பிரதேச தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்கள் அனுப்பிய இடங்களில் எல்லாம், பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது' என்று கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!