வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (08/12/2017)

கடைசி தொடர்பு:11:40 (08/12/2017)

சிறுவர்களைக் காவுவாங்கக் காத்திருக்கும் ஓடாத தேர்! - அப்புறப்படுத்த மக்கள் வலியுறுத்தல்


         

"எங்க ஊர்ல உள்ள சிவன்கோயிலுக்கு, பல லட்சம் செலவு பண்ணிட்டாங்க. ஆனா, கோயில் முன் இருக்கும் ஓடாத தேரை அப்புறப்படுத்தாமல் வச்சிருக்காங்க. அந்தத் தேரின் பலகை எல்லாம் உளுத்துபோயிட்டு. அதனால், அதுல ஏறி விளையாடும் சிறுவர்களுக்கு அடிப்பட்டுடுமோன்னு பயமா இருக்கு" என்று கவலைப்படுகிறார்கள் கருப்பத்தூர் கிராம மக்கள்.

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது கருப்பத்தூர். இந்தக் கிராமத்தில் இருக்கும் ஜம்புகரேஸ்வரர் கோயில், மிகவும் பிரசித்திபெற்றது. பங்குனி மாதம் நடக்கும் திருவிழாவின் ஒரு அங்கமாக அலங்கரிக்கப்பட்ட தேரை இழுப்பது வழக்கம்.  இந்தக் கோயிலுக்கென்று  இருந்த தேர் பழுதாகிவிட்டதால், கோயில் நிர்வாகம் புதிய தேரைச் செய்து, திருவிழா நடத்திவருகிறது. ஆனால், சிதிலமான பழைய தேரை கோயிலுக்கு எதிரேயே நிறுத்திவைத்துள்ளார்கள். அதை அப்புறப்படுத்தாததால்,சிறுவர்கள் அந்தத் தேரில் ஏறி விளையாடுகிறார்கள். அதுதான் அந்தப் பகுதி மக்களை கலங்க வைத்திருக்கிறது.


 

அதுபற்றிப் பேசிய கருப்பத்தூர் கிராம மக்கள், "இந்தத் தேரை அப்புறப்படுத்துங்கன்னு ரெண்டு வருஷமா சொல்லிட்டு வர்றோம். ஆனா,கோயில் நிர்வாகம் அப்புறப்படுத்த மாட்டேங்குது. கேட்டா, 'இதை அப்புறப்படுத்த அறநிலையத்துறை உயரதிகாரிகளின் அனுமதிக் கடிதம் வரணும்' என்கிறார்கள்.