Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குமரி மீனவர்களுக்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம்!

Chennai: 

ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி 4,000 மீனவர்கள் நாகர்கோவில்- குளச்சல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னையில் சேப்பாக்கத்தில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி, ஏழு நாள்களாக அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழக அரசின் தரப்பில் உரிய மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், நேற்று காலை ஆயிரக்கணக்கான மக்கள் குழித்துறை ரயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், மாவட்ட ஆட்சியர், போலீஸ் உயரதிகாரிகள் அங்கு சென்று மீனவர்களுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், `முதல்வர் மீனவர்களை சந்திப்பதாக உறுதியளித்துள்ளார்' என்று ஆட்சியர் தரப்பில் கூறப்படவே, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இன்று 4,000 மீனவர்கள் நாகர்கோவில்- குளச்சல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குமரி மீனவர்களுக்கு ஆதரவாக சென்னை சேப்பாக்கத்தில் மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் போராட்டம் நடைபெறும் பகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “கடலில் மாயமான மீனவர்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. படகுகள், ஹெலிகாப்டர்கள் இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. தமிழக முதல்வரும் கடற்படை அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு மீனவர்களை மீட்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளார்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement