மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் குதித்த குமரி மக்கள்!

போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் கடலில் காணாமல்போன மீனவர்களைத் தமிழக அரசு விரைந்து மீட்டுத்தர நடவடிக்கை எடு்க்கக்கோரி தேங்காய்பட்டினத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5,000-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்போது `மீனவர்களை மீட்டுக் கொடுங்கள். இல்லையென்றால் குமரி மாவட்டத்தைக் கேரளாவுடன் இணைத்துவிடுங்கள்’ என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். தேங்காப்பட்டினம் பகுதியில் நடைபெறும் மீனவர் போராட்டத்தில் திருமுருகன் காந்தி, சுப.உதயகுமாரன், எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!