எம்.ஆர்.பி-யைவிட அதிகவிலைக்கு பொருள் விற்பனை! சரவணா செல்வரத்தினம் கடைக்கு அபராதம்

மதுரையில் புதிதாகத் திறந்த சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் எம்.ஆர்.பி.யைவிட அதிக விலைக்கு விற்று வாடிக்கையாளரை ஏமாற்றியதாக அந்த நிறுவனத்துக்கு 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்.

சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்

இதுபற்றி வழக்கு தாக்கல் செய்த வழக்கறிஞர் சுப்ரமணியனிடம் பேசினோம், "சில நாள்களுக்கு முன் சரவணா செல்வரத்தினம் ஸ்டோரில் பொருள்கள் வாங்கச் சென்றேன். அங்கு நான் வாங்கிய பொம்மை ஒன்றில் எம்.ஆர்.பி விலைக்கு மேலாக 62 ரூபாய் அதிகமாக மற்றொரு விலை ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார்கள்.

சரவணா செல்வரத்தினம்இதுபற்றி கடை நிர்வாகியிடம் கேட்டதற்கு மரியாதை இல்லாமல் பேசியது மட்டுமல்லாமல் செக்யூரிட்டியை அழைத்து என்னை வெளியில் தள்ளச் சொன்னார்கள். வழக்கறிஞர் என்று நான் சொல்லியும் மோசமாக நடந்து கொண்டார்கள். 

இவர்களுக்கு எம்.ஆர்.பி.யிலயே லாபம் உள்ளபோது அதைவிட 50 சதவிகிதம் அதிகமாக வைத்து விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் நுகர்வோரையும் அரசையும் ஏமாற்றுகிறார்கள். அது மட்டுமல்லாமல் விளக்கம் கேட்கும் நுகர்வோரிடம் வன்முறையாக நடந்து கொல்கிறார்கள். அதனால்தான் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் சரவணா செல்வரத்தினம் ஸ்டோருக்கு வழக்குச் செலவு மூவாயிரம், கூடுதலாக விலை வைத்த 62 ரூபாயுடன் 73 ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்பதை உணர வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!