ஆட்டோமேஷனுக்காக தொழிலாளர்களைத் தயார்படுத்த வேண்டும்..! இந்திய முதன்மை அறிவியல் ஆலோசகர் பேச்சு!

வெல்ட் இந்தியா 2017

இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெல்டிங் மற்றும் வெல்ட் இந்தியா 2017 சார்பாகச் சென்னை வர்த்தக மையத்தில் வெல்டிங் தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி (ஐந்தாவது இன்டர்நேஷனல் காங்கிரஸ்) டிசம்பர் 7ம் தேதி தொடங்கியது. விழாவைத் தொடங்கி வைக்க இந்தியாவின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர்.ஆர்.சிதம்பரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவருடன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெல்டிங் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டர். சிசில் மேயர், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வெல்டிங்கின் தலைவரும், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான டாக்டர் ஏ.கே.பாதுரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டிசம்பர் 7 முதல் 9 வரை, மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அப்போது நாடு முழுவதும் வெல்டிங் துறையில், சாதித்தவர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்திய முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர்.ஆர்.சிதம்பரம் அணு ஆராய்ச்சி போன்ற பெரிய ஆய்வுகளில் வெல்டிங்கின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆட்டோமேஷன் எல்லாத் துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், வெல்டிங் துறையில் அது நுழைவது பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும். அதற்காகத் தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

வெல்ட் இந்தியா 2017

இந்த வெல்ட் இந்தியா 2017 கண்காட்சிக்கு உலகமெங்கிலும் இருந்து உயர் தொழில்நுட்ப பார்வையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களும் வருகை தருகிறார்கள். மேலும், ஒரே இடத்தில் வெல்டிங் தொடர்பான அனைத்து உயர் தொழில் நுட்ப பொருட்களையும் காண முடியும் என்பதால் எண்ணற்ற நுகர்வோர்களுக்கும் இந்தக் கண்காட்சி பயனுள்ள ஒன்றாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!