ஈரோட்டில் விஷவாயு தாக்கி ஒருவர் பலி..! தொழிலாளர்கள் போராட்டம்

ஈரோட்டில் விஷவாயுத் தாக்கி தொழிலாளர் உயிரிழந்ததையடுத்து, அந்த நிறுவனத்தை தொழிலாளர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை அடுத்த மரப்பாலம் பகுதியில் லட்சுமி கெமிக்கல்ஸ் செயல்பட்டு வருகிறது. இங்கு பிலிஜிங் வாட்டர் தயாரிக்கப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இன்று காலை முத்து என்ற 45 வயது மதிக்கதக்க தொழிலாளி பிலிஜிங் வாட்டரை லாரியில் பிடித்து கொண்டு செல்ல முயற்சித்து இருக்கிறது.

அப்போது நிறுவனத்தில் யாரும் இல்லாததால் அவராகவே குழாய்கள் மூலம் லாரியில் ஏற்றி விட்டிருக்கும் போது பிலிஜிங் வாட்டரில் இருந்து வந்த விஷவாயு முத்துவை தாக்கியது. முத்து மயக்கிய நிலையில் கீழே விழுந்து மரணம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கம்பெனியில் பணிபுரியும் சக ஊழியர்கள் நிறுவனத்தின் கண்ணாடிகளை சரமரியாக தாக்கி உடைத்தனர். பிறகு உயிரிழந்த முத்துவின் குடும்பத்திற்கு நிறுவனம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுப்பற்றி ஊழியர் லட்சுமணன், ''கம்பெனியில் உள்ள மேனேஜர், அதிகாரிகளின் டார்ச்சரால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. மயக்கம் அடைந்து 20 நிமிடம் அப்படியே கீழே படுத்து கிடந்துள்ளார். யாராவது மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருந்தால் பிழைத்திருப்பார். யாரும் இல்லாததால் மரணம் அடைந்துள்ளார். இதுப்போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும்'' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!