புறநகர் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்..! ரயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகளின் காரணமாக புறநகர் ரயில்கள் இயக்கத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 


சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வழித்தடங்களில் கும்மிடிப்பூண்டி மார்க்கம் செல்லும் புறநகர் ரயில்களில் 9,10-ம் தேதி மாற்றம் செய்து தென்னிந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 

1.9,10-ம் தேதிகளில்(நாளை மற்றும் நாளை மறுநாள்) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்குச் செல்லவேண்டிய, (புறப்படும் நேரம் 10.25, 11.35, 12.20, 13.25) ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்கள் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீஞ்சூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

2.9,10-ம் தேதிகளில்(நாளை மற்றும் நாளை மறுநாள்) சென்னை சென்டரலிருந்து சூலூர்பேட்டை வரை செல்லவேண்டிய (புறப்படும் நேரம் 12.40) ரயில் மீஞ்சூர் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

3. 9,10-ம் தேதிகளில்(நாளை மற்றும் நாளை மறுநாள்) கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்ட்ரல் வரை செல்லவேண்டிய (புறப்படும் நேரம் 11.20, 12.55, 13.35) ரயில்கள் மீஞ்சூரிலிருந்து சென்ட்ரல் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

4. 9,10-ம் தேதிகளில்(நாளை மற்றும் நாளை மறுநாள்) சூலூர்பேட்டையிலிருந்து சென்ட்ரல் வரை செல்லவேண்டிய (புறப்படும் நேரம் 11.15) ரயில், கும்மிபூண்டியிலேயே நிறுத்தப்படும். 

5. 9,10-ம் தேதிகளில்(நாளை மற்றும் நாளை மறுநாள்) சூலூர்பேட்டையிலிருந்து சென்ட்ரல் வரை செல்லவேண்டிய (புறப்படும் நேரம் 13.15) ரயில் மீஞ்சூரிலிருந்து சென்ட்ரல் வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேப்போல, 
கடற்கரை முதல் தாம்பரம் மார்க்க ரயில்களுக்கான, எழுப்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 

1. 9-ம் தேதி, ரயில் எண்- 40158 தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் (புறப்படும் நேரம் 23.30) ரயில் எழும்பூர் ரயில்நிலையத்தில் 11-வது நடைமேடைக்குப் பதிலாக 5 நடைமேடையில் நின்று செல்லும். 

2. 9-ம் தேதி, ரயில் எண் 40574 செங்கல்பட்டிலிருந்து கடற்கரை செல்லும் (புறப்படும் நேரம் 23.10) ரயில், எழும்பூர் ரயில்நிலையத்தில் 11-வது நடைமேடைக்குப் பதிலாக 5 நடைமேடையில் நின்று செல்லும். 

3. 9-ம் தேதி, ரயில் எண் 40157 கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் (புறப்படும் நேரம் 23.59) ரயில், எழும்பூரில் 10 நடைமேடைக்குப் பதிலாக 4-வது நடைமேடையில் நின்று செல்லும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!