வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (08/12/2017)

கடைசி தொடர்பு:23:00 (08/12/2017)

பொதுமக்கள் பெட்ரோல் பங்கு கழிப்பறைகளை பயன்படுத்தலாம்..! மதுரை மாநகராட்சி அதிரடி

பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை இனி பயன்படுத்தலாம் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. 


மதுரை மாநகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஜனவரி மாதம் மத்திய அரசு இந்தியாவிலுள்ள தூய்மையான நகரங்களை கணக்கெடுக்க உள்ளது. அதனால், அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்க மதுரை மாநகராட்சியைத் தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்று உணர்ந்த மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை மக்கள்

மாநகராட்சிப் பகுதிகளில் திறந்தவெளியில் பொதுமக்கள் சிறுநீர், மலம் கழிக்க கூடாது, கழிப்பறை வசதியில்லாத நகரப்பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். நூறு கிலோவுக்கு மேல் குப்பைகள் தேங்கும் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், அடுக்கமாடிக் குடியிருப்புகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், தொழிலகங்கள் இனி தாங்களே அந்தக் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அவற்றை உரமாக தயாரிக்கவேண்டும்'' என்றும் தனது அறிவிப்பில் கூறியுள்ளார். வாகனத்தில் எரிபொருள் நிரப்ப வருகிறவர்களுக்கே கழிப்பறையை பயன்படுத்த விடாத பெட்ரோல் பங்கு நிர்வாகிகள், சாதாரண மக்கள் பயன்படுத்த அனுமதிப்பார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் பொதுமக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க