மருத்துவ முதுநிலை மாணவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் 12-வது நாளை எட்டியது!

protest

மருத்துவ பணியில் உள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் தனியார் மருத்துவர்களுக்கு முக்கியதுவம் கொடுத்து முறைகேடாக நடந்த மருத்துவத் தேர்வை  ரத்து செய்ய வேண்டும். முறைகேடாக  நடத்தப்பட்ட நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். 69% இட ஒதுக்கீடு முறையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு தலைமை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் காலவரையின்றி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் நேற்றுடன் 12-வது நாளை கடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒருவகையில் போராட்டத்தை நடத்தி வரும் இவர்கள் நேற்று தங்களது உடல் உறுப்புகளை  தானம்  செய்து தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் 12-வது நாளில் சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றம் இல்லாதாதல் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர் மாணவர்கள்.

இந்தப் பிரச்னை குறித்து உயர்நீதிமன்றக்கிளையில் மனு அளித்துள்ளதாகவும் அந்த மனு திங்கள் அன்று விசாரணைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தனர் மாணவர்கள். இந்தப் போராட்டம் அமைதியான முறையில் இன்றும் தொடரும் என மருத்துவர் ரமேஷ் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!