வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (09/12/2017)

கடைசி தொடர்பு:12:37 (09/12/2017)

செய்தியாளர்கள் பணம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம்..! மன்னிப்பு கேட்ட அ.தி.மு.க ஐ.டி பிரிவு

சேகர் ரெட்டியிடமிருந்து தமிழகத்தின் மூத்தச் செய்தியாளர்கள் பணம் பெற்றதாக வெளியிடப்பட்ட பட்டியல் தவறானது என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
பிரசாத் தெரிவித்துள்ளார். 


சேகர் ரெட்டியிடமிருந்து தமிழக அமைச்சர்கள் பணம் பெற்றுள்ளனர்  என்று நேற்று சில ஆவணங்கள் வெளியாகின. அதேதேரத்தில், தமிழகத்தின் மூத்தச் செய்தியாளர்களும் சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றுள்ளதாக ஒரு போலியான ஆவணம் வெளியானது. அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்த ஆவணம் வெளியிடப்பட்டது. அதற்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ஷபீர் அகமது, அ.தி.மு.க தொழில்நுட்பப்பிரிவின் செயலாளர் பிரசாந்திடம் தொலைபேசி மூலம் கேள்வி எழுப்பினார்.