தேவாரம், திருவாசகம் பாடி வைகை நதியை வரவேற்ற மானாமதுரை மக்கள்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் இன்று காலை 7 மணிக்கு வந்த தண்ணீரை சமூக அமைப்பினரும், பொதுமக்களும் ஆராதனை செய்து வரவேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், வைகை பாசனத்தையும், வர்ணபகவானையும் நம்பியே, விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக வறட்சி பாதித்ததால் குடிக்ககூட மக்கள் தண்ணீர் இன்றி காலிகூடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, சாலைமறியல் என செய்து வந்தார்கள். தண்ணீர் இன்றி போனதால் பயிர்காப்பீடு செய்த விவசாயிகள் இன்றுவரைக்கும் காப்பீடு தொகை வாங்க முடியாமல் திணறி வருகின்ற சம்பவம் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கிறது.

மதுரையை அடுத்து மணலூர், திருப்பாசேத்தி, திருப்புவனம், மானாமதுரை, தெ.புதுக்கோட்டை வரைக்கும் மணல் மாபியாக்கள் இரவு பறவைகளாக மணல்களை கடத்தி வருகிறார்கள். அந்த பள்ளங்களை தண்ணீர் கடந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மானாமதுரை ஆற்றை தொட்டிருக்கிறது. வரும் வழியில் உள்ள மரம் ,செடி, கொடிகளையெல்லாம் அடித்துக்கொண்டு தண்ணீர் வந்த போது மக்கள் ஆனந்த கண்ணீர் பொங்க,

 ஸ்ரீஆனந்தவல்லி சோமநாதர் சாரிடபிள் டிரஸ்ட்டியினர் மற்றும் பொதுமக்கள் தேவாரம், திருவாசகம் பாடி மலர் தூவி வரவேற்றனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!