தெருக்களில் ஓடும் சாக்கடை... உற்பத்தியாகும் கொசு... மதுரை கலெக்டர் கவனிப்பாரா?

issues

மதுரை மாவாட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், மாற்றுத்திறனாளிகள் சேவைக்கான விருதை  ஜனாதிபதியிடம் பெற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாள்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்து, மதுரையில் தான் செயல்படுத்திய முன்னேற்றத் திட்டங்களை விளக்கினார். அப்போது, மதுரை சுகாதாரமாக உள்ளது. டெங்கு அதிகப்படியாக ஒழிக்கபட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். திருச்சி, மதுரையில் தான் அதிக அளவு டெங்கு பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கெனவே மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தகவல் அளித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை ஆட்சியர் பல ஆய்வுகளையும் மேற்கொண்டு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி நடவடிக்கைகள் எடுத்ததால் மதுரை சுத்தமாகிவிட்டதோ என்று சின்ன விசிட் அடித்தோம். ஆனால் மதுரை சாபங்கள் மாறாமல் பல இடங்கள் சுகாதாரமற்ற இடங்களாகவே காணமுடிந்தது. மதுரை வண்டியூர் பேருந்துநிலையம் அருகே இருக்கும் பகுதிகளில் சாக்கடை நீர் புகுந்து துர்நாற்றம் அடிப்பதாக புகார் எழுந்தது.  அது தொடர்பாக சமத்துவமக்கள் கட்சி மதுரை மாநகர் கிழக்கு மாவட்டம் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் கூறுகையில் " மதுரை மாவட்டம் வார்டு எண் 29 மாரியம்மன் நகர் முதல்தெரு பிரதான சாலையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு பொது மக்கள், பள்ளிக் குழந்தைகள் சாலையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.  கழிவுநீர் தேங்கி நிற்பது மட்டுமின்றி துர்நாற்றம் வீசுகிறது.

issues

பலரின் வீடுகளிலும் நீர் புகுந்துவிடுகிறது.  கடந்த 10 நாள்களுக்கு மேலாக  இதே சூழல் நிலவுகிறது. இதனால் கொசு அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியரும் , மாநகராட்சி ஆணையரும் சுகாதரமற்ற இடங்களை சீர்செய்ய உத்தரவிட வேண்டும்'' என கேட்டுக்கொண்டார். ''மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை முழுவது பல விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறார். ஆனால் வெறும் விழிப்பு உணர்வு மட்டும் போதாது சுகாதரமற்ற இடங்களையும் பற்றிய தகவலை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்'' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!