விரிவடைகிறது பழைய மாமல்லபுரம் சாலை… புறவழிச்சாலை திட்டம் தயார்!

மாமல்லபுரம்

திருப்போரூரிலிருந்து கேளம்பாக்கம் வரை செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், 201  கோடி ரூபாயில் புறவழிச்சாலை அமைக்க சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

சென்னையிலிருந்து திருப்போரூர் வழியாக மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ள கேளம்பாக்கம், படூர், திருப்போரூர், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில், சாஃப்ட்வேர் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டுவருகின்றன. இதனால், இப்பகுதிகளில் குடியிருப்புளும் அதிக அளவில் வரத்தொடங்கிவிட்டன. சென்னையின் புறநகர்ப் பகுதியான இந்த இடங்களில் ஸ்டார் ஹோட்டல்கள், மால்கள், வணிக வளாகங்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.

வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் இப்பகுதிகளில் தங்கி வேலைசெய்துவருகிறார்கள். இதனால், திருப்போரூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் தொடங்கி சிறுசேரி வரை உள்ள பழைய மாமல்லபுரம் சாலையை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் 6 வழிப் பாதையாக மேம்படுத்தி கட்டணம் வசூல் செய்துவருகிறது. இந்நிலையில், சிறுசேரி – மாமல்லபுரம் சாலையை ஆறுவழிப் பாதையாக மேம்படுத்துவதன் துவக்கமாக, இரண்டு பகுதிகளிலும் 201 கோடி மதிப்பீட்டில் புறவழிப் பாதைகள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!