திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்கழி மாத நடைதிறப்பு நேரம் மாற்றம்!

trichendur subramaniyaswamy kovil

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில், மார்கழி மாத நடைத்திறப்பு நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் இணை ஆணையர்  பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மார்கழி மாதம், வரும் 16-ம் தேதி தொடங்கி 2018 ஜனவரி 13-ல் நிறைவடைகிறது. மார்கழி மாதத்துக்கான பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்த தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 முதல் 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 மணி முதல் 9 மணிக்குள் உச்சிக்கால தீபாராதனை, பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணி முதல் 7 மணிக்குள் ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணி முதல் 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று, திருக்கோயில் நடை திருக்காப்பிடப்படும். 

இந்த நாள்களில், முக்கிய விழா நாளான ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கும், ஜனவரி 2-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கும், ஜனவரி 14-ம் தேதி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கும் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!