வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (09/12/2017)

கடைசி தொடர்பு:20:20 (09/12/2017)

தமிழக அரசை எச்சரிக்கும் அரசுப் பணியாளர்கள் சங்கம்!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்துவதைக் கண்டித்து, டிசம்பர் 18-ம் தேதி, சென்னையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு நீண்டகாலமாக விருப்ப மாறுதல் வழங்கவும், முன்னுரிமைப்பட்டியல் வெளியிடவும் தமிழக அரசு காலதாமதம்செய்துவருகிறது.

                               

மேலும், பதவி உயர்வு வழங்குவதில் ஏற்பட்டுவரும் காலதாமதத்தைப் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் ஆய்வுசெய்து உடனடியாக விருப்ப மாறுதல், பதவி உயர்வு வழங்கிட முன்னூரிமைப் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 18-ம் தேதி சென்னையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.