வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (10/12/2017)

கடைசி தொடர்பு:07:57 (11/12/2017)

"விடுதலை வரை காத்திரு..!" - பேரறிவாளன் வாசித்த கிடார் இசை#WorldHumanRightsDay #VikatanExclusive

லகமே நிசப்தமாக இருக்கும் நள்ளிரவு நேரத்தில் வாட்ஸ்அப் வழியாக ஒரு கிடார் இசை ஒன்று பகிரப்படுகிறது. அதனுடே அது அனுப்பிவைக்கப்பட்ட எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பும் வருகிறது. 26 வருடங்களாக தனது மகனை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் மட்டுமே பார்த்துவிட்டு, அந்த மகன் என்றேனும் விடுதலையாகித் திரும்பிவிடுவான் என்கிற நம்பிக்கையையும் தவிப்பையும் இத்தனை வருடங்களாக மனதில் ஏந்தியிருக்கும் குரல் அது.. அற்புதம்மாளின் குரல் மறுமுனையில் ஒலிக்கிறது,

பேரறிவாளன்

”நாந்தாம்மா பேசறேன்!... எம்மகன் பரோல்ல வெளிய வந்து ரெண்டு மாசம் எங்க எல்லாரோடையும் இருந்தப்போ எம்மவன் நிரந்தரமா என் கூடவே தங்கிட மாட்டானானு மனசெல்லாம் ஏங்கிடுச்சு. பரோல் முடிஞ்சு அவன் சிறைக்குத் திரும்பிப் போகும்போது “சீக்கிரம் எங்கூடவே இருக்கற மாதிரி வந்துருப்பா அறிவுன்னு..” மனசு கலங்க அவனுக்கு சொல்லி வழியனுப்பி வைச்சேன். ரொம்ப வருஷம் கழிச்சு எங்களோட அற்புதம்மாள்இருக்க வந்ததால எம்மகன அக்கா, தம்பி, அக்கா பிள்ளைங்கனு யாரும் தூங்கவே விட மாட்டாங்க. விடிய விடிய பேசிட்டு விளையாடிட்டு இருப்பாங்க. அறிவுக்கு கிடார் வாசிக்கப் பிடிக்கும்னு அவங்க அக்கா தங்கை ரெண்டு பேரும் ஆசையா கிடார் வாங்கி வெச்சாங்க. அதுல அவனுக்கு பிடிச்ச பாட்டு ஏதாவது அவங்களுக்கு வாசிச்சுக் காட்டுவான். அப்படி ஒருமுறை வாசிச்சதுதாம்மா  உனக்கு அனுப்பியிருக்கேன். இப்பக் கூட சிறையில போய் அறிவ பார்த்துட்டு வந்தேம்மா. இந்த மனித உரிமை தினத்துலையாவது தன்னை விடுதலை செஞ்சிருவாங்களான்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்காம்மா. விடுதலை செஞ்சிருவாங்களாம்மா? எம்மகனுக்கு விடுதலை கிடைக்கனும் ஒரு நல்லது நடத்திப்பாக்கனும்” என்று தழுதழுத்தாலும், நம்பிக்கை குறையாமல் கூறுகிறது அந்தக் குரல். உண்மையில் அற்புதம்மாளைச் சமாதானப்படுத்தும் பதில் அப்போது நம்மிடம் இல்லை.

 

பேரறிவாளன் சிறை சென்று இதோடு இருபத்து ஐந்து சர்வேதச மனித உரிமை தினங்கள் கழிந்துவிட்டன. 1948ல் முதன்முதலில் வரையறுக்கப்பட்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் மூன்றாவது உறுப்புரை ஒவ்வொரு தனிமனிதருக்குமான வாழ்வையும் விடுதலையையும் உறுதி செய்கிறது. இந்த மனித உரிமை தினத்திலாவது பேரறிவாளனுக்கு அந்த உரிமை உறுதி செய்யப்படுமா? 

பேரறிவாளன் வாசித்ததாக அற்புதம்மாள் அனுப்பியிருந்த கிடார் இசையைக் கேட்டோம். ’கயாமத் ஸே கயாமத் தக்’ என்கிற இந்திப் படத்தில் வரும் ’ஏ மேரே ஹம்சஃபர்’ பாடலை தனது கிடாரில் வாசித்திருந்தார். தனது காதலை இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்திருக்கும்படி தொடங்கும் அந்தப் பாடல்...

 

”ஏ மேரே ஹம்சஃபர் 

எக் ஸரா இந்தஜார்

சுன் சதாயேன் தே ரஹி ஹேன்

மன்சில் பியார் கி

பியார் நே ஜஹான் ப்பே ரக்கா ஹே
ஜூம்கே கதம் ஏக் பார்
வஹின் சே குலா கோயி ராஸ்தா
வஹின் சே கிரே ஹே திவார்!”

 

பேரறிவாளன் வாசித்த கிடார் இசையைக் கேட்க கீழே உள்ள வீடியோ இணைப்பை க்ளிக் செய்யவும்

 

 

 அன்பு காலடி எடுத்து வைக்கும் இடங்களில் எல்லாம் எப்படியேனும் ஒரு வழி பிறக்கும், ஏதேனும் ஒரு திரை விலகும்! என்பதுதான் பேரறிவாளன் வாசித்த பாடலின் சரணத்தின் பொருள். 

வழி பிறக்கட்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்