வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (10/12/2017)

கடைசி தொடர்பு:16:25 (10/12/2017)

வைகையை காக்க களமிறங்கும் அன்னா ஹசாரே!

நதிநீர் பாதுகாப்பு ஆர்வலர்கள்,  வைகை நதி மீட்பு அமைப்பினர், மதுரை மாவட்ட விவசாய அமைப்புகள் நடத்தும் நதிநீர் பாதுகாப்பு பற்றிய  கருத்தரங்குகளில் கலந்துகொள்ள மதுரை வந்துள்ளார் அன்னா ஹசாரே.

வைகையை காக்க

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய அன்னா ஹசாரே, "மதுரையின் முக்கிய நீராதாரமான வைகை ஆறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை மீட்கும் பணியில் ஈடுபட உள்ளேன். மகாராஷ்டிராவில் இதுபோன்று நதி பிரச்சினை இருந்தது. அதை திட்டமிட்டு மீட்டோம். எங்கள் பகுதி கிராமங்களிலும் தண்ணீர் பிரச்சினை இருந்தது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமையில் தவித்தார்கள். பிறகு திட்டமிட்டு மழைக்காலங்களில் தண்னீரை சேமித்து விவசாயம் செய்து இன்று முன்னேறியுள்ளோம்.

பானங்கள் தயாரிக்கும்  தொழிற்சாலைகளுக்கு தண்ணீரை வழங்காமல் விவசாயத்துக்கு வழங்க அரசு முன்வர வேண்டும். வெளிநாட்டு பானங்களை குடிக்காமல் மக்களால் உயிர் வாழமுடியும். ஆனால் உணவில்லாமல் வாழ முடியாது. மார்ச் 23 ஆம் தேதி டெல்லியில் விவசாயிகளை வைத்து போராட்டம் நடத்தவுள்ளேன். ஊழலில் காங்கிரசும் பிஜேபியும் ஒன்றுதான்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க