வெளியிடப்பட்ட நேரம்: 03:24 (11/12/2017)

கடைசி தொடர்பு:08:31 (11/12/2017)

வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு!

லக ஹாக்கி லீக் போட்டித் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்ததுடன், வீரர்களுக்காக தலா 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.

புவனேஸ்வரில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. எனினும், டிசம்பர் 10-ம் தேதி நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, ஜெர்மனியுடன் மோதியது. இப்போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல்கணக்கில்  வெற்றிபெற்று வெண்கலப்பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்திய ஹாக்கி அணியினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசையும் அவர் வழங்கி கௌரவித்தார். 

இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை நவீன் பட்நாயக் வழங்கி கௌரவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க