வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (11/12/2017)

கடைசி தொடர்பு:11:03 (11/12/2017)

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரமா? - கவுண்டமணி திடீர் விளக்கம்

ஆர்.கே.நகர் தொகுதியில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில்  நடிகர் கவுண்டமணி அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம்செய்துவருவதாக செய்திகள் பரவின. 

goundamani
 

இன்று, காலைப் பத்திரிக்கை ஒன்றில், ”ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, டிச-14ல், கவுண்டமணி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். நடிகர் செந்தில், அதே சமுதாயத்தைச் சேர்ந்த தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய உள்ளார். கவுண்டமணியும் செந்திலும், திரையுலகில் ஒன்றாக இணைந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர்கள். தற்போது, அரசியல் உலகில் எதிரும் புதிருமாகப் பிரசாரம் செய்ய உள்ளனர்” என்று செய்து வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி, சமூக வலைதளங்களில் தீ போல பரவியது.   ''கவுண்டமணி, எடப்பாடிக்கு ஆதரவு; செந்தில், தினகரனுக்கு ஆதரவு” என்று நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இந்நிலையில், பத்திரிகையில் வெளியான செய்தி பொய் என்று கவுண்டமணி கூறியுள்ளார்.

 இதுகுறித்து கவுண்டமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில்... 

"இன்று (11.12.17)  காலை நாளிதழ் ஒன்றில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அரசியலிலும் இல்லாதவன். 

நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை. என்னைக் கேட்காமல் அவதூறாக செய்தி வெளியிட்டால், அவர்கள்மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் " என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க