நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் திடீரென ராஜினாமா செய்தார் பொன்வண்ணன்!

நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியைத் திடீரென பொன்வண்ணன் ராஜினாமாசெய்திருப்பது, சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளில் நடக்கும் மாற்றங்களைவிட நடிகர் சங்கத்தில் நடக்கும் மாற்றங்கள் சற்று அதிகம். நாள்தோறும் பரபரப்பான ஏதாவது ஒரு விஷயம் நடிகர் சங்கத்தில் நடந்துவருகிறது. 

நடிகர் சங்கம் பொண்வண்ணன்


அந்த வகையில், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், ஆர்.கே.நகர் தேர்தலில் மனுத்தாக்கல் செய்யப்போவதாகத் தகவல்கள் வந்ததிலிருந்து சினிமா உலகைச் சேர்ந்த சிலர் விஷாலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வந்தனர். இதற்கிடையில், நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பித்த சில மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. கூட்டத்தைப் பாதியில் நிறுத்தியதைக் கண்டித்து நடிகர் சேரன், டி.ராஜேந்தர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பைக் கோபமாகப் பத்திரிகையாளர் முன்னிலையில் பதிவுசெய்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான நடிகர் பொன்வண்ணன், சங்கப் பொறுப்பில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். விஷாலின் பாண்டவர் அணியிலிருந்த பொன்வண்ணன், திடீரெனப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!