வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/12/2017)

கடைசி தொடர்பு:18:52 (11/12/2017)

காந்தி மியூசியத்தில் பளபளக்கும் பழங்காலப் பொருள்கள்! மதுரையில் அசத்தல் கண்காட்சி

பழங்கால

மதுரை காந்தி மியூசிய அருங்காட்சியகத்தில், மதுரை தபால்தலை  மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்கம் சார்பாக, பழங்கால கலைப்பொருள்கள் சிறப்புக் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியை மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்  பாலமுருகன் துவங்கிவைத்தார். அருங்காட்சியகக் காப்பாட்சியர் பெரியசாமி அனைவரையும் வரவேற்றார் இந்த கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக, முன்னாள் வேளாண் பல்கலைக்கழகப்  பதிவாளர் சுவாமியப்பன்,  தபால் நாணயங்கள்  சேகரிப்பாளர் செயலர் சண்முகலால், மதுரை தபால் தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்க ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதுகுறித்து இந்த கண்காட்சியை காட்சிப்படுத்திய வருமான வரித்துறை அதிகாரி ஜாய் சேகர்  கூறுகையில், “இந்த சிறப்புக் கண்காட்சியில், பழங்கால கலைப்பொருள்கள், பழங்கால கைக்கடிகாரங்கள்,  தொலை நோக்கிகள், பல வகையான புகைப்படக்கருவிகள் , பழங்கால பூட்டுகள் , மரப் பொம்மைகள் எனப் பல வகையான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கண்டுகளித்தனர் .

துரை விஜயபாண்டியன்

கண்காட்சியில் வைக்கப்பட்ட பேனா ஒன்று, மாணவர்களை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்தனர். பளபளவென ராஜா காலத்து பொருள்போல இருக்கும் அந்த ஒரு பேனாவின் விலை, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். வெண்கலம் உள்ளிட்ட உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் விளையாட்டு பொருள்களை வைத்திருப்பது மிகவும் பிடித்ததாக, முனைவர் மணி வாழ்த்து தெரிவித்தகாகக் கூறினார் .