ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியைப் பத்திரமாக மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் துணிச்சலாக மீட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. 

சென்னை சென்ட்ரல்


கே.ஜெயப்பிரகாஷ் என்னும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருவனந்தபுரம் சிறப்பு ரயில் அங்கிருந்து கிளம்பத் தயாரானது. ரயில் புறப்படத் தொடங்கியதும் வர்மா என்ற பயணி ரயிலின் உள்ளே ஏற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாகக் கால் இடறியதால் அவர் தவறி ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே விழுந்தார். 

இதைக் கவனித்த ஜெயப்பிரகாஷ் உடனே ஓடிச்சென்று அந்த நபரைப் பிளாட்பாரத்தை நோக்கி இழுத்து அவரின் உயிரைக் காப்பாற்றினார். இது ரயில் நிலையத்தில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஜெயப்பிரகாஷின் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது.  

இதேபோல், சென்னையைச் சேர்ந்த பி.ஆகாஷ் (16) என்பவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். ரயில்வே பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் அவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!