ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வி.சண்முகவேலு, மாவட்டப் பொருளாளர் என்.ஹரிஹரசுதன், மாவட்டப் பொறுப்பாளர் கே.கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சங்க மாநிலச் செயலாளர் பி.ஜீவா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாதம்தோறும் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும்,தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 200 நாள்கள் வேலை வழங்கிட வேண்டும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும். வேலை வாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ.மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன்,முத்துராமு, ஆறுமுகம்,சதீஷ்,பிர்தௌஸ் கனி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!