வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (12/12/2017)

கடைசி தொடர்பு:15:30 (09/07/2018)

அங்கன்வாடி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் அங்கன்வாடிப் பணியிடங்களை நிரப்பக்கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் முறையீடு செய்தனர். 

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் என 890 பணியிடங்கள் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியதுடன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தகுதியானவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. ஆனாலும், பணி வழங்கப்படவில்லை. இதனால் தற்போது பணியாற்றும் ஊழியர்கள் கூடுதலாக 2 முதல் 4 மையங்கள் வரை பராமரித்துவருகின்றனர். இந்நிலையில், நீண்ட ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சங்க நிர்வாகிகள் சாந்தி, ஜேம்ஸ்அனிட்டா, எம்.சாந்தி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்