'மனிதநேயமிக்க பண்பாளர் ரஜினி'- தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து #HBDSuperStarRajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 68-வது பிறந்தநாளையாெட்டி, அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலக்கில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்துவரும் ரஜினிகாந்த்துக்கு இன்று 68-வது பிறந்தநாள். இதையொட்டி அவரது ரசிகர்கள் சர்ச், கோயில்கள், மசூதிகளில் சிறப்புப் பிரார்த்தனை செய்துவருகின்றனர். மேலும், ஏழைகளுக்கு அன்னதானமும், மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கிவருகின்றனர்.

இதனிடையே, ரஜினிகாந்த்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், நீண்ட நாள்கள் ஆரோக்கியமான உடல்நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தனது ட்விட்டர் பக்கத்தில், மனிதநேயமிக்க பண்பாளர், நண்பர் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொலைபேசியில் ரஜினியை தொடர்புக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, முழு உடல் நலன், மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்" என்று வாழ்த்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!