பெண் ஊழியரைக் கொடுமைப்படுத்தினாரா நீதிபதி?

கொடுமை
திருச்சி பெண் நீதிபதி வீட்டில் பெண் ஊழியர் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி, குடும்பநல நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் திலகம். இவரது அலுவலக உதவியாளராக பணியாற்றி வருபவர் நிர்மலா. இவரை நீதிபதி திலகம் தன் வீட்டு வேலைக்கும் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருவை, அவரது அறையில் நிர்மலா சந்தித்ததாகவும், அப்போது, நீதிபதி திலகம் மற்றும் அவரது தாயார் ஆகியோர்மீது நிர்மலா குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், நீதிமன்றப் பணிக்கு பணியமர்த்தப்பட்ட நிர்மலாவை தனது வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வந்த நீதிபதி திலகம், வேலைகளை சரியாகச் செய்யவில்லை என்றுக் கொடுமைப்படுத்தியதாகவும், மேலும், நீதிபதியின் தாயார் சூடு வைத்ததாகவும் குற்றஞ்சாட்டியதுடன், இதுகுறித்து நிர்மலா முதன்மை நீதிபதி குமரகுருவிடம் கதறி அழுது, புகார் தெரிவித்தார் என்றும், இதுகுறித்து விசாரிப்பதாக முதன்மை நீதிபதி குமரகுரு கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தப் புகாராலும், தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால் திருச்சி நீதிமன்ற வளாகம் பரபரப்பாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!