இந்த மருந்துதான் ஜெயலலிதா உடல்நலம் பாதிப்புக்குக் காரணம்! சிகிச்சையளித்த அக்குபஞ்சர் மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையில், விசாரணைக் கமிட்டி முன் அக்குபஞ்சர் மருத்துவர் ஆஜராகி விளக்கமளித்தார்.

நீதிபதி ஆறுமுகசாமி

ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவர், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தநிலையில், அவருடைய மரணம் நிகழ்ந்தது.  அவரது மரணத்துக்குப் பின், அ.தி.மு.க-வில் குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சி பிரிந்தது. கூடவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகங்கள் எழுந்தன. ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றித் தெரிந்துகொள்ள, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், தனிநபர் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்தது. ஆறுமுகசாமி, விசாரணையைத் தொடங்கி நடத்திவருகிறார். அதன்படி, சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுவருகிறது.

 விசாரணையின் ஒரு பகுதியாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சையளித்த மருத்துவர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அதில், “ஸ்டீராய்டு மருந்துகள் அதிக அளவில் தந்ததால்தான் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது” என விசாரணை ஆணையத்தில் கூறியுள்ளார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!