''பிரதமர் மோடியின் ஒருநாள் உணவுச் செலவு 4 லட்சம் ரூபாய்!''- அதிர்ந்த காங்கிரஸ் வேட்பாளர்

பிரதமர் மோடி குஜராத் உணவு வகைகளை விரும்புவதில்லை. மாறாக ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தைவான் காளான் உணவைத்தான் விரும்பிச் சாப்பிடுவதாக காங்கிரஸ் வேட்பாளர் அல்பேஷ் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் உணவுச் செலவு

ரதம்பூரில் போட்டியிடும் அல்பேஷ் தாக்கூர் பேசுகையில், '' பிரதமர் மோடி குஜராத் மாநிலம்தான் முன்மாதிரி என்று கூறுகிறார். ஆனால், குஜராத் உணவுகளை அவர் சாப்பிடுவதில்லை.  அதற்குப் பதிலாக தைவான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான் உணவைத்தான் விரும்பிச் சாப்பிடுகிறார். இந்தக் காளான் ஒன்றின் விலை ரூ.80 ஆயிரம் ஆகும். நாள் ஒன்றுக்கு 5 காளான்களை மோடி சாப்பிடுகிறார். குஜராத் முதல்வராக மோடி ஆனதில் இருந்தே, இந்தக் காளான் உணவைத்தான் சாப்பிடுகிறார். பிரதமர் மோடியின் ஒருநாள் சாப்பாட்டுச் செலவு ரூ.4 லட்சம் ஆகிறது. 

சாதாரண மக்களை எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் என மோடி கூறுவார். ஆனால்,  பிரதமர் எளிமையாக வாழ்வதில்லை. குஜராத்தில்  ஏற்பட்ட வெள்ளத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தத் தொகையை பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள்  ஊழல் செய்துள்ளனர்.

அல்பேஷ் தாக்சுர், குஜராத்தில் ஓஎஎஸ் எக்தா மந்த் என்ற அமைப்பைத் தொடங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்களை ஒன்றிணைந்தார். தற்போது,  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ரதம்பூரில் போட்டியிடுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!