ஒரு ரூபாய் டிக்கெட் விலையுடன் மீண்டும் களமிறங்குகிறது ஏர்டெக்கான்! | flight tickets starting at Rs 1.. Air Deccan's new scheme

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (13/12/2017)

கடைசி தொடர்பு:13:50 (13/12/2017)

ஒரு ரூபாய் டிக்கெட் விலையுடன் மீண்டும் களமிறங்குகிறது ஏர்டெக்கான்!

ந்தியாவின் முதல் மலிவுவிலை விமான சேவை நிறுவனமான ஏர் டெக்கான், மீண்டும் ஆகாயத்தில் பறக்க உள்ளது. 

ஏர் டெக்கான் மீண்டும் சந்தைக்கு வருகிறது

2003-ம் ஆண்டு, கேப்டன் கோபிநாத்தால் தொடங்கப்பட்ட ஏர்டெக்கான், 2008-ம் ஆண்டு விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸுடன் இணைந்தது. தொடர்ந்து, 2012-ம் ஆண்டு கிங்ஃபிஷர் சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஏர்டெக்கான் நிறுவனர் கோபிநாத், 'மின்ட்' ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ''டிசம்பர் 22-ம் தேதி முதல் மீண்டும் ஏர்டெக்கான் செயல்படத் தொடங்குகிறது. மும்பையிலிருந்து நாசிக் நகருக்கு முதல்  விமானம் செல்கிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களைச் சிறிய நகரங்களுடன் இணைக்கும் வகையில், ஏர்டெக்கான் சேவை செயல்பட உள்ளது.  விமானத்துறையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன், என்னுடைய கடைசி முயற்சி இது. தொடக்கத்தில் சில சலுகைகளுடன் 1 ரூபாய்க்கு டிக்கெட் வழங்குகிறோம்''  என்றார்.

மத்திய அரசு அறிவித்துள்ள 'உடான்' திட்டம் அளித்த  ஊக்கத்தால், ஏர்டெக்கான் மீண்டும் களமிறங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி,  டிக்கெட் விலை ரூ.2,500. ஒரு மணி நேரத்துக்குள், ஒரு நகரிலிருந்து மற்றோர் நகருக்குச் செல்லும் வகையில் பயணத் திட்டம் இருக்கும். சாதாரண மனிதர்களை விமானத்தில் பயணிக்கச்செய்வதே 'உடான் ' திட்டத்தின் நோக்கம். மும்பை - நாசிக் இடையே சாலை வழிப்பயணத்துக்கு 4 மணி நேரம் ஆகும். ஆனால், உடான் திட்டத்தின்படி, 40 நிமிடத்தில் சென்றுவிடலாம். 

இந்தியாவில் உள்ள மத்தியவர்க்கத்தினரை விமானத்தில் பறக்கவைத்த பெருமை ஏர்டெக்கானுக்கு உண்டு. ஏர்டெக்கானின் லேகோவைக் கூட' தி காமன்மேன் ' என்ற பெயரில் கேலிச்சித்திரத்தை உலகப் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் ஆர். கே. லக்ஷ்மண்தான் உருவாக்கினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க