வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (13/12/2017)

கடைசி தொடர்பு:13:26 (13/12/2017)

’எனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுகிறேன்!’ - நடிகர் பொன்வண்ணன்

நடிகரும், நடிகர் சங்கத்தின் துணைத் தலைவருமான பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இவரது இந்த முடிவு சினிமாவில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ponvannan

 

விஷாலின் பாண்டவர் அணியில் இருப்பவரான பொன்வண்ணனின் இந்த முடிவு விஷால்மீது அவர் கொண்ட அதிருப்தியின் காரணமாகதான் என பலர் பேசிக் கொண்டனர். மேலும், பொன்வண்ணனின் ராஜினாமாவை ஏற்கவில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். மேலும், பொதுச்செயலாளர் விஷால், சங்கத்தின் சட்ட விதிகளுக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை என்று தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில், இன்று நடிகர் பொன்வண்ணனின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அதில் பல்வேறு கருத்துகளைப் பற்றி பேசிய பொன்வண்ணன் தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுகிறேன். நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர்  பதவியை தொடர்வேன் என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க