வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (13/12/2017)

கடைசி தொடர்பு:13:46 (13/12/2017)

சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் விஜய்யின் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்டிருப்பவர், நடிகர் விஜய். சமீபத்தில், அட்லி இயக்கத்தில் இவர் நடித்த 'மெர்சல்' திரைப்படம், ஹிட் அடித்தது. மேலும், படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி வசனம், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா இடையே அதிர்வை ஏற்படுத்தியது. மேலும், படத்தில் ஜி.எஸ்.டி பற்றி விஜய் பேசிய வசனம் வைரலானது. 

விஜய்

தற்போது, வேட்டி சட்டையில் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது. மூன்றாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளின் சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில், பொங்கல் பண்டிகையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், வேட்டி சட்டை தமிழர்களின் கலாசாரம் என்று குறிப்பிடப்பட்டு, அதற்குப் பக்கத்தில் விஜய் வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புத்தகத்தில் இருக்கும் விஜய்யின் புகைப்படம், 'வேலாயுதம்' படத்தில்  வந்த ஒரு காட்சியாகும்.பாடப் புத்தகத்தில் விஜய் புகைப்படம் இருப்பதைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க