வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (13/12/2017)

கடைசி தொடர்பு:17:50 (13/12/2017)

20 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட ஆலை! இன்னும் நீதி கிடைக்காத தொழிலாளர்கள்

collecrate

மதுரை பசுமலையில் இயங்கி வந்த மகாலெட்சுமி மில், ஆலையின் சீர்கேட்டின் காரணமாக 1996-ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. இதனால், 1,000 தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். கிட்டதட்ட 20 வருடங்களுக்கு மேல் ஆகியும் நீதி கிடைக்காத தொழிலாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "கடந்த ஜூலை மாதம், தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், நிர்வாகத் தரப்பில் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், தொழிலாளர் இணை ஆணையர் சார்பில் முதல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆலை தரப்பினர் செவி சாய்க்காத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டாம் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. இன்னமும் நிர்வாகத் தரப்பினர் இணங்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் விரைந்து தலையிட்டு, பாதிப்படைந்த தொழிலாளர்களுக்குப் பணிக்கொடை மற்றும் உரிய பணப்பயன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், மனுவை பரிசீலனை செய்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக நம்பிக்கை தெரிவித்ததாக மனு அளித்தவர்கள் தெரிவித்தனர் .