`வேட்டியை மடித்துக்கட்டினால் நானும் ரவுடிதான்' - ஹெச்.ராஜாவின் கலாட்டா பேச்சு

திருமாவளவன் தலித் அல்ல; அவர் முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறி பல மாதங்களாகிவிட்டது. திருமாவளவன் ரவுடினா நானும் ரவுடிதான். பி.ஜே.பி நினைத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியே இருக்காது என காரசாரமாகக் காரைக்குடியில் ஹெச்.ராஜா பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சிவகங்ககை மாவட்டம், காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நகர பி.ஜே.பி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் மணிசங்கர் ஐயரையும் கண்டித்து பி.ஜே.பி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராஜா, ''சாதி சண்டைகளைத் தூண்டுவதற்காகத் திருமாவளவனுக்கு கொடுத்திருக்கும் அசைன்மென்ட் இது. ரொம்ப பேர் நினைக்கிறாங்க திருமாவளவன் ரவுடினு. அவர் சமுதாயத்தைக் காட்டிக்கொடுக்கும் தீயசக்தி. நான்கூட வேட்டியை மடித்துக்கட்டினால் ரவுடிதான். ஆனால், நான் சமுதாய மக்களுக்காகப் போராடக்கூடிய ரவுடி.

யார் இந்தத் திருமாவளவன். ஒரு லட்சம் பேரை மதம் மாற்றுவதாகவும் லட்சம் பேருக்கு தமிழ் பெயர் வைக்கப் போவதாகவும் சொன்ன திருமாவளவன் பெத்த அப்பாவுக்கு மட்டும்தான் தமிழ் பெயர் வைக்க முடிந்தது. சீர்காழியில் பேசினாராம் திருமாவளவன், பி.ஜே.பி மேடையில் கல்லெறிவோம் என்று. பி.ஜே.பி நினைத்தால் உங்கள் கட்சியை இல்லாமல் ஆக்க முடியும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஜவாஹிருல்லாவின் அடியாட்களாகத் திருமாவளவன் இருக்கிறார். மதமாற்றம் செய்யும் தீயசக்திகளின் கைக்கூலியாக வேலை செய்கிறார் திருமாவளவன்.

லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவனை கைது செய்தால் திருமாவளவன் ஏன் போராட்டம் நடத்துகிறார். திருமாவளவன் முடிந்தால் முதுகெலும்பு இருந்தால் இந்து கோயில்களை  இடித்துப்பாருங்கள். என்ன நடக்கும் என்று பிறகு தெரியும். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் பேசும் வசனம்தான் ஞாபகம் வருகிறது. வாங்குன காசைவிட அதிகமாக தாவுறானேனு சொல்லும் காட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. மணிசங்கர் ஐயரே இத்தாலி சோனியாவின் கைக்கூலிபோல் எங்கள் பிரதமர் இருப்பார் என்று நினைக்காதீர். திருமாவளவன் தலித் அல்ல. அவர் முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறி ரொம்ப நாள்களாகிவிட்டது. தமிழகத்தில் சாதிச் சண்டைகள் இல்லையென்று சொல்லமாட்டேன். அது ஒரு சில இடங்களில் நடக்கிறது. திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் அழிக்கப்பட வேண்டும். அப்போது தமிழர்கள் எழுச்சி பெறுவார்கள். ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டிய ஒன்று'' என்று ஆவேசமாகப் பேசி முடித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!