கூகுளை ஆண்ட பாகுபலி 2 - கூகுள் சர்ச் ட்ரென்ட்ஸ்

இந்தியளவில் 2017-ம் ஆண்டில் கூகுள் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியலில் 'பாகுபலி 2' முதலிடம் பிடித்துள்ளது. உலகளவில் அதிகம் தேடப்பட்ட படங்களில் 7 வது இடம் பிடித்துள்ளது.

பாகுபலி 2

இந்தாண்டுக்கான கூகுள் சர்ச் ட்ரெண்ட்ஸ் நிலவரங்களைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சர்வதேச அளவிலும் தேசியளவிலும் என்று தேடப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் பொதுவாகத் தேடப்பட்ட வார்த்தைகள் எனவும் பாடல்கள், படங்கள், நபர்கள், விளையாட்டு நிகழ்வுகள், வாட் இஸ்..?, ஹௌ டு..? கேள்விகள், செய்திகள் என உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

கூகுள்  சர்ச் ட்ரென்ட்ஸ்

அதில் 'பாகுபலி 2' என்ற தேடல் வார்த்தை இந்திய அளவில் முதலிடத்திலும் உலகளவில் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 7வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய பட்டியலில் 'வாட் இஸ் ஜல்லிக்கட்டு ?' என்ற வினா தேடல் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது அதே பட்டியலில்  'வாட் இஸ் ஜி.எஸ்.டி'? என்ற வினா தேடல் வாக்கியம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!