10 மாதங்களில் 16,301 பேருக்கு டெங்கு; 52 பேர் உயிரிழப்பு! உயர் நீதிமன்றத்தில் அரசு அதிகாரபூர்வத் தகவல் | 52 people died due to dengue in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (13/12/2017)

கடைசி தொடர்பு:19:30 (13/12/2017)

10 மாதங்களில் 16,301 பேருக்கு டெங்கு; 52 பேர் உயிரிழப்பு! உயர் நீதிமன்றத்தில் அரசு அதிகாரபூர்வத் தகவல்

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "இந்தியாவில், ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை. ஆகவே டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். இது குறித்து நடவடிக்கை கோரி மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே டெங்குவால், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் 5 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு  நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "டெங்கு தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேண பொதுமக்கள் முன்வர வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த தமிழகம் 40 ஆயிரம் மஸ்தூர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர சிகிச்சை மற்றும் பராமரிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்குவை  உறுதிப்படுத்தும் வகையில் 125 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்த அதிக பேர், அதாவது 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் இறந்துள்ளனர். ஆனால், டெங்குவைக் கட்டுப்படுத்த அரசுத்தரப்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, டெங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையேற்றுக்கொண்ட நீதிபதிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எடுக்கப்பட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


[X] Close

[X] Close