மறியலால் ஸ்தம்பித்த நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை!

கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில்  வீசிய ஒகி புயலால் வரலாறு காணாத அளவு கன்னியாகுமரி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம், பயிர் சேதம்,பொருள்சேதம், குடியிருப்புகள் சேதம் என  மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

தென்னை, வாழை, ரப்பர் மரங்களை இழந்தவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை என்று கூறி விவசாயிகள் தக்கலையில் வட்டாட்சியர் அலுவகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அதில்  2000 பேர் திரண்டு சாலை மறியல் செய்ததால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தபித்தது.

பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. சப்- கலெக்டர், வட்டாட்சியர் போன்றவர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஆகாததால், கன்னியாகுமரி மாவட்ட  கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் தக்கலைக்கு விரைந்து வந்தார். அவர் பேச்சுவார்த்தை நடத்திய பின் விவசாயிகள் கலைந்து சென்றனர். நாளைக்குள் விவசாயிகளின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளாவிட்டால்  15ம் தேதி மாவட்டம் தழுவிய பந்த் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மீனவர்கள் போராட்டம் முடிந்துள்ள நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியிருப்பது மாவட்டத்தை பரபரப்பாக்கி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!