மாணவர்கள் மத்தியில் ஆபாச நடனம்! அரசுப் பொருட்காட்சியில் நடந்த கொடுமை

மிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி தொடக்க விழாவில் பள்ளி மாணவர்களின் முன் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடியக் கூத்து அரங்கேறியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின்போது, பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடினார். பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆபாசமாக நடந்த இந்த நடனத்தைக் கண்டு மாணவர்களும் ஆசிரியர்களும் முகம் சுளித்தனர். 

எனினும், தொடர்ந்து இந்த டான்ஸ் நிகழ்ச்சி நடந்தது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த நடனத்தை ஆடினார். மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. நாமக்கல் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

நடனத்தைக் கண்டு, பொதுமக்களும் பெற்றோரும் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் பெல்லி டான்ஸ் ஆபாசமாக பார்க்கப்படுவதில்லை. ஆனால், நம் நாட்டு கலாசாரத்துக்கு அதுவும் மாணவர்கள் முன்னிலையில் பெல்லி டான்ஸ் ஏற்பாடு செய்தது எந்த விதத்தில் சரியானது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!