வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (14/12/2017)

கடைசி தொடர்பு:16:10 (14/12/2017)

மணல் பிசினஸ் இனி இவர்கள் கையில்...!

 மணல் குவாரி

 மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நள்ளிரவில் மணல் கடத்தல் தங்குதடையின்றி நடந்துவருகிறது. 

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை ஆறு மாதங்களுக்குள் மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. இது, ஆளுங்கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணல் பிசினஸில் கால்பதித்துள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களிடம் முறையிட்டனர். அப்போது அவர்கள், மணல் அள்ளுவதை யாரும் நிறுத்த வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிவிடுகிறேன்' என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனால், மணல் பிசினஸுக்காக லட்சக்கணக்கில் பணம் கொடுத்தவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதையடுத்து, நள்ளிரவில் தங்குதடையின்றி மணல் கடத்தப்படுகிறது. 

மணல் பிசினஸில் கொடிக்கட்டிப் பறந்த சேகர் ரெட்டியின் கூட்டாளியான புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் மூலம்தான் தற்போதும் மணல் அள்ளப்படுகிறது. அந்த நெட்வோர்க்கில் சென்னையைச் சேர்ந்த ஜெ.எம்.பஷீர் மூலம் அமைச்சர்கள் அன்கோ மணலை அள்ளுவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. மணல் தட்டுபாட்டை காரணம்காட்டி, நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை உடைக்க ஆளுங்கட்சியினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்

இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆளுங்கட்சியினரே மணல் பிசினஸில் ஈடுபடுவது வாடிக்கை. தற்போது, அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துவதோடு ஆன்லைன் மூலமும் மணல் அள்ளப்படுகிறது. மணல் தேவையைக் கருத்தில்கொண்டு, புதியதாக 70 குவாரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைச் சமாளிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. நள்ளிரவில் மணல் அள்ளுவதுகுறித்து புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.